டெல்லியில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சி கூட்டம்...!

நான்காம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

வரும் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக,அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத் தொடரை பொருத்தவரை நிலுவையில் உள்ள 37 மசோதாக்களை நிறைவேற்றவும், ஆறு மசோதாக்களை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக பொது சிவில் சட்டம் குறித்த விவாதம், மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது உள்ள குற்றச்சாட்டு மற்றும் அவரை பணிக்கு சேர்ப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

அதை வேளையில் எதிர்க்கட்சிகளின் சார்பாக மஹூவா மொய்த்ரா விவகாரம், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் எனவும் தெரிகிறது.