இலங்கை அனைத்து கட்சி கூட்டம்: ரணிலின் கேள்விகளுக்கு முறையான பதிலை தர முடியாமல் திணறினார் பசில்!!

இலங்கையில்  நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே திணறினார்.

இலங்கை அனைத்து கட்சி கூட்டம்: ரணிலின் கேள்விகளுக்கு முறையான பதிலை தர முடியாமல் திணறினார் பசில்!!

அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.  இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே,சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை  இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றார். 

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்களுக்கும்  மேல் நீடிக்கலாம் எனவும்  இந்தியா அளித்துள்ள கடனுதவி நிதி மே மாதம் நடுப்பகுதி வரை நீடிக்காது என தெரிவித்துள்ள  ரணில் விக்கிரம சிங்கே, அரசுக்கு தேவையான நிதியை பெறுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராயவேண்டும் என கோரினார்.

கூட்டமைப்பை உருவாக்க கூடிய புதிய நட்பு நாடுகளை அணுகி நிதி உதவியை கோர வேண்டும் என  அவர் கெட்டு கொண்டார்.  2002 முதல் 2004 வரையான காலகட்டத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது  இதுபோன்ற உலகநாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தியதாகவும்  ரனில் தெரிவித்துள்ளார்.