விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து போராட்டம்- சாலையெங்கும் விவசாயிகள் குவிந்து இருப்பதால் பெரும் பதற்றம்

ஹரியானாவில் கடந்த 28-ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து இன்று போராட்டம் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து போராட்டம்- சாலையெங்கும் விவசாயிகள் குவிந்து இருப்பதால் பெரும் பதற்றம்

ஹரியானாவில் கடந்த 28-ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும், தங்களுடைய கோரிக்கைகளை அரசு செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் 11 குழுக்களுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று போராட்டம் தொடங்கியது. இதனால், ஹரியானாவின் கர்னால், குருஷேத்ரா, கைத்தால், ஜிண்ட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இணையதள மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும்,  கர்னால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஹரியானாவை சுற்றி மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த தடியடி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இதையடுத்து  கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.