சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு வந்த யானை...! உடல் நலக் குறைவால் பாதிப்பு..!

சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு வந்த யானை...!  உடல் நலக் குறைவால் பாதிப்பு..!

விருதுநகரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு வந்த யானைக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் ராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ராஜபாளையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட லலிதா என்ற 57 வயது யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் மதுரை சாலையில் தனியார் இடத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை  சேர்ந்தவர் முகமது ஷேக். இவர் லலிதா (56) என்ற யானையை பராமரித்து வருகிறார். இந்த யானையை விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள  ராமர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்தனர். ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் கொண்டு வரப்பட்ட யானை லலிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

யானை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விருதுநகர் மதுரை சாலையில் தனியார் இடத்தில் வைத்து யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விருதுநகரில் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுக்கு வந்த யானையை வைத்து ராமர் கோயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் - ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி.