புத்தாண்டு கொண்டாட்டம்...! தனியார் ரிசாட்டில் நடைபெற்ற பேஷன் ஷோ..!

புத்தாண்டு கொண்டாட்டம்...! தனியார் ரிசாட்டில் நடைபெற்ற பேஷன் ஷோ..!

புத்தாண்டையொட்டி புதுச்சேரி தனியார் ரிசாட்டில் நடைபெற்ற பேஷன் ஷோ சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், இந்தியா முழுவதுமுள்ள பேஷன் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடற்கரையில் பேஷன் ஷோ நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு பல்வேறு உடையணிந்து ரேம்ப்வாக் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை கண்டு ரசித்ததோடு, தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் புத்தாண்டை ஒட்டி சுற்றுலா பயணிகள் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com