தாலிபான்களுடன் இந்திய தூதர் தீபக் மிட்டல் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக தாலிபான்களுடன் இந்திய தூதர் தீபக் மிட்டல் பேச்சுவார்த்தை நடத்தினார். 
தாலிபான்களுடன் இந்திய தூதர் தீபக் மிட்டல் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சியமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுவதுமாக வெளியேறியது.

இதனிடையே அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கத்தாருக்கான இந்திய தூதரான தீபக் மிட்டல், தோகாவில் தாலிபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திருப்பி அனுப்புவது குறித்து வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com