எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா சர்ச்சை பேச்சு...

எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா சர்ச்சை பேச்சு...
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முதல்வருமான எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துறைக்க எடியூரப்பாவால் முடியவில்லை என கூறியிருந்தார்.
சித்தராமையாவின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக இது பாஜக-வினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்தராமையாவின் இந்த அநாகரீக பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com