ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி; இந்தியா அபார வெற்றி! 

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி; இந்தியா அபார வெற்றி! 

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

மத்திய, மாநில அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியின் 3-வது போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதி முடிவில் இந்திய அணி 6 கோல்களும், சீன அணி 2 கோல்களும் அடித்திருந்தன.

இந்திய அணியின் சார்பில் வருண் குமார் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களையும், ஆகாஷ்தீப் மற்றும் சுக்ஜீத் ஆகியோர் ஒரு கோலும் அடித்தனர். அடுத்து நடைபெற்ற 2-வது பாதி போட்டியில் மந்தீப் சிங் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, தனது 100-வது கோலை பதிவு செய்து அசத்தினார்.

இதன்மூலம் இந்திய அணி 7-வது கோலுடன் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து, சீன அணி கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எடுபடாமல் போனது. இதனையடுத்து முழு நேர ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீன அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதையும் படிக்க:’ஹார்ட்’ எமோஜி அனுப்பினால் சிறைதண்டனையா...? -