Ind Vs WI : ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா!!

Ind Vs WI : ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா!!

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  2-1 என்ற கணக்கில், இந்தியா, தொடரை கைப்பற்றியது. 

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 

அதனைதொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன்கில் 85 ரன்களும், இசான் கிஷன் 77 ரன்களும் எடுத்தனர். 

352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதிக பட்சமாக இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், முகேஷ் குமார் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்ட முடிவில் 35 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 151 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்படி, இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, தொடரை கைப்பற்றியது. 

ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளையும் சேர்த்து 184 ரன்கள் எடுத்த இஷான் கிஷன், தொடர் நாயகன் விருதையும், கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றனர். அடுத்ததாக இரு அணிகளும் நாளை முதல் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளன.

இதையும் படிக்க || ஓ.பி.எஸ். மகன் மீது பெண் பகீர் புகார்... யார் இந்த பெண்?