தேசிய ஹாக்கி போட்டி; பஞ்சாப் அணி சாம்பியன்!

தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு அணி மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன், மைதானத்தில் 13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை களைகட்டியது. இதன் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பஞ்சாப் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் பஞ்சாப் அணியில் விளையாடி பெனால்டி கார்னரில் கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இரு அணிகளும் சம பலத்துடன் மாறி மாறி கோல் அடிக்க பிரதான நேரம் முடிவில் இரண்டுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

வெற்றியை தீர்மானிக்க பெனால்டி-ஷர்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த ஆட்டத்தில் அணல் பறந்தது. இறுதியில் 9-8 என்ற கோல்கள் கணக்கில் பஞ்சாப் அணி த் ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியும் 3-3 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிவடைந்ததால். வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அசத்திய தமிழ்நாடு வீரர்கள் அனைத்து வாய்ப்பையும் கோலாக மாற்றி ஐந்துக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்து வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.

பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார். முதலிடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு தங்கப்பதக்கம் இரண்டாவது இடம் பிடித்த ஹரியானா அணிக்கு வெள்ளி பதக்கமும் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு அனைத்து வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க:"10 ஆண்டுகளில் யானையை பார்க்க முடியாது" உயர்நீதிமன்றம் வேதனை!