இரட்டை தங்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு வீராங்கனை...!!

இரட்டை தங்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு வீராங்கனை...!!

சென்னையிலுள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் சலீமிடம் பயிற்சி பெற்றுவரும் அனுபமா ராமச்சந்திரன் 2 தங்கத்தை வென்று இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் பெண்களுக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது.  இதில் 18 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.  உலக சாம்பியன்ஷிப் ஸ்னூக்கர் போட்டியில்  இந்தியாவிலிருந்து எட்டு பேர் பங்கேற்றனர்.  இந்திய ஏ  அணியில் இடம் பெற்று இருந்த வீராங்கனைகள் தமிழ்நாடை சொந்த அனுபமா ராமச்சந்திரன் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமி காமினி  ஆகியோர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 க்கு 3  என்ற  கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்  வென்றுள்ளனர்.

மேலும் மார்ச் 4ஆம் தேதி  நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் அனுபமா பட்டம் வென்று 2வது தங்கத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அனுபமா ராமச்சந்திரனும், தாய்லாந்து வீராங்கனை ப்ளாய்சோம்பூ லோகியாபாங்கும் மோதினர்.  சர்வதேச அரங்கில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வரும் தாய்லாந்து வீராங்கனை முதலில் 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது தமிழ்நாடு வீராங்கனை அனுபமா ராமச்சந்திரன் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 2 பிரேம்களை கைப்பற்றி முன்னணி வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்து 3க்கு 2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனை அடுத்து பெங்களூரு வழியாக சென்னை விமான நிலையம் வந்த அனுபமா ராமச்சந்திரனுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  மேலும் இவரது பயிற்சியாளர் எஸ்ஏ சலீம் மற்றும் அகடமியை சேர்ந்த அப்துல் ரகுமான் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் அனுபவமாவின் தந்தை ராமச்சந்திரன் தாயார் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பெருந்திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிக்க:  எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர... பற்றி எரியவில்லை...!!!