பெண்கள் பிரிமீயர் லீக்; மும்பையில் இன்று தொடக்கம்

பெண்கள் பிரிமீயர் லீக்; மும்பையில் இன்று தொடக்கம்

5 அணிகள் பங்கேற்கும் 'பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று மாலை தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 26-ந் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் குஜராத், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உத்தர பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் குஜராத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும், 2 மற்றும் 3ஆம் இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது. மொத்தம் 22 போட்டிகள் நாள்தோறும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.