காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்...
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், குரூப் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த நான் யி செங் ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். 
இப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றில் ஹாங்காங் வீராங்கனை நான் யி செங்கை எளிதில் வீழ்த்தினார். 21க்கு 9, 21க்கு 16 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை  வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com