பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசுத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு!

பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசுத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.        

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா- மலேசியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில்,  4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இதையடுத்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி, தங்கப்பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தொிவித்தாா். மேலும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சா் அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ரகுபதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com