”100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா...”அமைச்சர் செந்தில் பாலாஜி!!!

”100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா...”அமைச்சர் செந்தில் பாலாஜி!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணி குறித்தும், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை குறித்தும் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி:

வடகிழக்கு பருவமழை பெய்தாலும் சீராக மின் விநியோகம் கிடைக்கவும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்தினோம். 

வரக்கூடிய நாட்களில் அதிக மழை பாதிப்பு இருந்தாலும் சீராக மின்விநியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுகடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை பழுதடைந்த 44,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது.

100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்வினியோகம் வழங்குவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு முதல்வர் வழங்கினார். மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழையினால் சென்னையில் எவ்வித பாதிப்பும் இல்லை. சீர்காழியில் மழையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து 36 மணி நேரத்தில் சீராக மின்விநியோகம் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும்.

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com