தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றம்...

தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றம்...
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி விபு நாயருக்கு சிறப்பு திட்டங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பும், ஐ.ஏ.எஸ் அதிகாரி மங்கத்ராம் ஷர்மாவுக்கு, சமூக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகாந்த் காம்ப்லேவிற்கு நில சீர்த்திருத்தத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய கண்ணன் ஐ.ஏ.எஸ், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும்.,

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த மகேஷ்வரி ரவிக்குமார், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை இணை செயலாளராக லட்சுமி ஐ.ஏ.எஸும்,

தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தராஜ் ஐ.ஏ.எஸும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐ.ஏ.எஸும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கர் லால் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  நகராட்சி நிர்வாகத்தின் இணை ஆணையராக அம்ரித் ஐ.ஏ.எஸும்,

நில அளவை துறை கூடுதல் இயக்குநராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக மெர்சி ரம்யாவும், ஓசூர் மாவட்ட உதவி ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த சீதாலட்சுமி வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணை ஆணையராகவும்., சமூக நலப் பாதுகாப்புத்துறையின் இயக்குநராக வளர்மதி ஐ.ஏ.எஸும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com