அரக்கோணம் அருகே விவசாய கிணற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு!!

அரக்கோணம் அருகே விவசாய கிணற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு!!

அரக்கோணம் அருகே விவசாய கிணற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் ரோஷன். இவர் தனது நண்பன் யுவராஜ்யுடன், காவனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்குள்ள விவசாய கிணற்றில் குளித்தபோது அவர்கள் இரண்டு பேரும் எதிர்பாராதவிதமாக  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்த கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.