பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழப்பு : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்ததில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடித்ததில், ரமேஷ் - அஸ்வினி தம்பதியரின் 4 வயது மகள், நவிஷ்கா தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அத்துடன், பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு 4 விரல்கள் அகற்றப்பட்டன. இதில் மது போதையில் நாட்டு வெடி வெடித்து, விபத்து ஏற்படுத்தியதாக சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிக்க : தீபாவளி விடுமுறை ; ரூ. 467 கோடிக்கு மது விற்பனை!

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், சிறுமி நவிஷ்கா குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த விக்னேஷூக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.