பாம்பு கடித்து இறந்த 6 வயது சிறுவன்...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்ல பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பாம்பு கடித்து இறந்த 6 வயது சிறுவன்...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சரப்பனஞ்சேரி நாட்டரசன் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருக்கு   சச்சின்  மற்றும் விக்னேஷ்  என இரண்டு குழந்தைகள் உள்ளன.

இதற்கிடையில் நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது. இதனைகண்ட அங்கிருந்தவர்கள் சிறுவனை கடித்த பாம்பை அடித்து கொன்றனர். இதனை பார்த்து  அதிர்ந்துபோன ராமு மற்றும் உறவினர்கள் சச்சினை உடனடியாக  மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சச்சின் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் சச்சினின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.