விதிகளை மீறி விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி.. பள்ளி நிர்வாகத்துக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை!!

விதிகளை மீறி விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி.. பள்ளி நிர்வாகத்துக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை!!

பழனியில், விடுமுறை நாளில் விதிகளை மீறி செயல்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு, கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமையான இன்று பள்ளிகள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், பழனி கோட்டாட்சியர் சிவக்குமார், சண்முக நதி அருகே செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது தெரிய வந்தது.

பள்ளி நிர்வாகத்துக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை

எனினும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் யாரும் இல்லாமல், வகுப்புகள் மட்டும் நடைபெற்றுள்ளது. இதனால், நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த கோட்டாட்சியர் சிவக்குமார், பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கண்டித்துள்ளார். மேலும், பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாட்சியர், மாணவர்களை வீடுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதுபோன்ற விதிமீறல்கள் இனியும் நடைபெற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அப்போது எச்சரிக்கை விடுத்தார்.

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மாணவ மாணவிகள்

இதனிடையே, விடுமுறை நாளில் பள்ளிக்கு வரவழைத்த வருத்தத்தில் இருந்த மாணவ மாணவிகள், அனைவரும் கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.