பள்ளி முடிந்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு!!

அரக்கோணம் அருகே அரசு பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி முடிந்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு!!

அரக்கோணம் அருகே அரசு பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவன் தற்கொலை முயற்சி:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவன், கதவை உட்பக்கமாக பூட்டி துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு:

அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?

 இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் டியூசனுக்கு செல்லாத மாணவனை தாயார் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இதற்கிடையே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.