விரைவில் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய மாநாடு...வைத்திலிங்கம் கொடுத்த புது அப்டேட்!

விரைவில் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய மாநாடு...வைத்திலிங்கம் கொடுத்த புது அப்டேட்!

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர்த்து அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். ஆனால், இவர்களின் சந்திப்பின் போது, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இடம்பெறவில்லை. இதனைத்தொடர்ந்து, ஓ.பி.எஸ்.- டி.டி.வி. சந்திப்பின் போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஏன் இடம் பெறவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருந்தார். 

இதையும் படிக்க : அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலு...ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு போட்டி...!

இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ் - டி.டி.வி. சந்திப்பு என்பது நாங்கள் ஒன்று கூடி எடுத்த முடிவு என்றும், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர்த்து அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறினார். மேலும், கொங்கு மண்டலத்தில் வெகு விரைவில் சிறப்பான மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.