முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம்....

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு  சொந்தமான இடங்களில் நடத்தப்படும் சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம்....

 இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கழக நிர்வாகிகள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அவதூறுகள் பரப்பினாலும், எதிர்காலத்தில் அதிமுக அடையபோகும் வெற்றிகளை தடுத்து நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.