'ஓபிஎஸ் அணி போஸ்டரை கிழித்த அதிமுகவினர்' சேலத்தில் பரபரப்பு!

'ஓபிஎஸ் அணி போஸ்டரை கிழித்த அதிமுகவினர்' சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை அதிமுகவினர் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி, தினகரன் ஆகிய இருவரும் அண்மையில் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்  ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஓபிஎஸ் அணியினர் அப்பகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நகர அதிமுகவினர் ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனால் காவல்துறை தரப்பில் கொடிகளை பயன்படுத்தாமல் நிர்வாகிகள் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதனிடையே கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க:"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்" உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..!