வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!

வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!
Published on
Updated on
1 min read

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை நிறைவு பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் மதுரையில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா பிரதானமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில்  நடைபெறும் இத்திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 3 ஆம் தேதி மதுரை அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், 4ம் தேதி முழுவதும் பல கிராமங்களை கடந்து நகர்ப்பகுதி முழுவதும் பொது மக்களுக்கு தரிசனம் கொடுத்தார். இந்நிலையில் நேற்று இரவு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு கிளம்பினார் கள்ளழகர். இந்த எதிர் சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை சுற்றி தண்ணீர் பீச்சு அடித்து தங்கள் நேத்தி கடனை செலுத்தினர்.

பச்சை நிற பட்டாடை உடுத்தி தங்கக் குதிரையில் புறப்பட்ட கள்ளழகர். இன்று காலை 6.30 மணியளவில் வைகையாற்றில் இறங்கினார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோதத்தை அடுத்து பக்தர்களின் கோவிந்தா கோசம் விண்ணை பிளந்தது.  பல லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்தனர். இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com