அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அண்ணாமலை... கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

அண்ணாமலை, விநாயகர் சிலை ஊர்வலம் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கூறியுள்ளார்.

அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அண்ணாமலை... கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கொரோனா பரவல் காரணமாக  விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  இந்த பிரச்சினையில் அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். 

நாடு முழுவதும் உள்ள மக்களின் சமூக நீதிக்காக போராடியவர் தந்தை பெரியார் அவருக்கு 100 அல்ல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேண்டுமானாலும் சிலை வைக்கலாம் மத்திய அரசு பட்டேலுக்கு சிலை வைத்ததில் உள்நோக்கம் இருந்தது ஆனால் தமிழக அரசு அப்படியில்லை.  

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் தெரிகிறது இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வரவேற்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இது வரவேற்கத்தக்கது. 

வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 26 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பாரத் பந்த் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும்.  தமிழகம் முழுவதும் ஏராளமான குத்தகை விவசாயிகள் தங்கள் குத்தகை பாக்கியை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள் பேரிடர் காலங்களில் ஏற்பட்ட இழப்பினால் இத்தகைய சூழல் உருவாகியுள்ளது இதில் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கான கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.