தென்காசி மாவட்டம் மேலப்பாவூரை சேர்ந்த மகாதேவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடமிருந்து பிரிந்து தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அகத்தியன் என்பவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனால் இரு வீட்டாரும் கண்டித்ததால், மனமுடைந்த காதல் ஜோடி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் மகாதேவி வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்தார். மேலும், அகத்தியன் ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.