மாற்று கட்சி தலைவர்களை தவறாக பேசுவது பாஜக டி.என்.ஏ வில் கிடையாது- அண்ணாமலை

மாற்று கட்சி தலைவர்களை தவறாக பேசுவது பாஜக டி.என்.ஏ வில் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

மாற்று கட்சி தலைவர்களை தவறாக பேசுவது பாஜக டி.என்.ஏ வில் கிடையாது-  அண்ணாமலை

நரேந்திர மோடி 20 ஆண்டுகள் முதல்வராகவும், பிரதமராகவும் சேவையாற்றியதை கெளரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாள் இன்று முதல் 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் டிஜிட்டல் தொடுத்திரைத் தொலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூகநீதி நாள் என ஒரு அரசு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தின் படிப் கொண்டாடுவதில் தவறில்லை. எங்களை பொறுத்தவரை சமூகநீதியை பாஜகவில் தான் பார்க்கிறோம் என்றார்.

செக்கிழுத்து எண்ணெய் தொழில் செய்த குடும்பத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடி பிரதமராக வந்திருக்கிறார். திராவிட கட்சிகள் சமூகநீதி என பேசுவதை உண்மையாக பாஜக செய்கிறது என தெரிவித்தார். மற்ற தலைவர்கள் பற்றி தவறாக பேசுவது பாஜக டி.என்.ஏ விலேயே கிடையாது.

ஆளுநர் என்பது அரசியலைமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்டது. 2017 இல் இருந்து பாதுகாப்பு சாவாலாக இருந்த நாகாலாந்த் பகுதியில் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஆர்.என் ரவி சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக நிலையை கொண்டு வந்தவர். எனவே அடுத்த முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு குடியரசு தலைவர் என்.ஆர் ரவியை ஆளுநராக நியமித்து உள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமானநிலையத்தில் ஆளுநர் என்.ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தார். புதிய ஆளுநர் நியமனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.

நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும், முக்கிய சட்ட மசோதாகளான ஆர்டிகல் 370, ராமர் கோவில், விவசாயிகள் மசோதா போன்ற சட்டங்கள் நிறைவேற்றும் போது அதிமுக பாஜகவிற்கு ஆதரவாக இருந்திருக்கிறது. இதற்கு பாஜக நன்றி கடன் பட்டிருப்பதாக கூறினார்.

அதிமுக பெரிய கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக விட்டு கொடுத்து போகவேண்டிய இடத்தில் விட்டு கொடுக்கும். பாஜக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் வருகிறார்கள். களம் மாறிவிட்டது 2024 தேர்தலில் அது தெரியும் என கூறினார்.