காங்கிரஸ் கட்சி தலைவரே இல்லாத கட்சி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

காங்கிரஸ் கட்சி தலைவரே இல்லாத கட்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவரே இல்லாத கட்சி  - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, பாஜக அடுத்த கட்டத்துக்கு நகர தயாரக உள்ளது. தற்போது 4 சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ள கட்சி அடுத்த 5 வருடத்தில் 150 உறுப்பினர்களை கொண்டிருக்கும்.என கூறினார்.

வருகிற 2026 ம்ஆண்டுடன் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்காது என்றும் எதிர்வரும் காலங்களில் அடுத்த கட்ட தலைவர்கள் பாஜக தவிர வேறு எந்த கட்சிகளிலும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் மூலமாக தமிழக விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்துள்ளனர் என கூறிய அவர், 2026 ம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்றும் இதன் மூலமாக பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் 70 ஆண்டுகால தமிழகத்தின் பீடை முடிவுக்கு வரும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை ஏற்பட்டால் வருகிற 10 ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை  பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபட போவதாகவும் தெரிவித்தார்.

சீனப்பட்டாசுக்கு தடை விதித்தது மத்திய பாஜக தான் என கூறிய அவர்,  சிவகாசி தொழில்களின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன்களிலும் மத்திய அரசு என்றென்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.