முதல்வர் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது? அண்ணாமலை கேள்வி!!

முதல்வர் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது? அண்ணாமலை  கேள்வி!!

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் மூலம், நீட் குறித்து திமுக நடத்திய நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது குறித்து முதல்வரின் மகன் சொன்ன ரகசியம் இனியாவது வெளியே வருமா என கேள்வி எழுப்பிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிற வேறு எதையும் திமுக செய்யவில்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு கூட்டணியில் இணைய அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.