கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு..? காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு... மாரிதாஸ் தில் ட்வீட்

கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு என்று பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு..? காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு... மாரிதாஸ் தில் ட்வீட்
கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு..? காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு... மாரிதாஸ் தில் ட்வீட்
 
கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு என்று பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்து வரும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், திமுகவுக்கு எதிரான அரசியல் தொடர்பான வீடியோக்களையும் பரப்பி வருகிறார். அதேபோல புள்ளி விவரங்களோடு பேசுவதாக தப்பு தப்பாக புள்ளி விவரங்களை சொல்லி நெட்டிசன்களிடம் சிக்கி டறியலாகும் சம்பவங்களும் நடக்கும், இவரைப் போலவே இவரது நண்பரான  கிஷோர் கே.சாமி  திமுகவை கடுமையாக தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்ததால் ஜெயிலில் தூக்கி போட்டும், இவர் திமுகவை விமர்சிப்பதை விடுவதாக இல்லை.
 
இந்நிலையில் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,' பெட்ரோல் டீசல் விலை குறைக்க முடியாது - திமுக நிதி அமைச்சர். 2மாதம் முன் டீசல் பெட்ரோல் 5,10 குறைப்போம் என்ற வாக்குறுதி கொடுத்தது திமுக தான். ஆக இதுவும் நீட் தேர்வு போல் அல்வா தான்!
பாதி நூற்றாண்டாக மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி கொள்ளை அடிக்க திமுக தவிர யாராலும் முடியாது. திமுக அமைச்சர் கூறிவிட்டார் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயார் ஆகவும். திமுக ஏமாற்றுகிறது என்று நான் சொன்னது தற்போது உண்மை எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்வர்.

 
இப்போதும் கூறுகிறேன், திமுக 100% ஏமாற்றும் நோக்கத்தோடு தான் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் ரத்து எனப் பிரச்சாரம் செய்தது."திமுக வாக்குறுதி கொடுத்தது போல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீட் தேர்வு ரத்து ஆகவில்லை என்றால் MLA பதவியை திமுகவினர் ராஜினா செய்வர்" என்று ஸ்டாலின், உதயநிதி கூற முடியுமா? என கூறியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, "ஜெய் ஹிந்த். வாழ்க பாரத தேசம். திமுக முடிந்தால் திராவிட நாடு கோஷம் போடு பார்க்கலாம். இது பாரத தேசம். உன்னை போல் பல ஆயிரம் பேர் பார்த்தாகிவிட்டது. 
 
காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு கருணாநிதி கும்பலுக்கு என்ன இருக்கு கொள்கை? திமுக பிரிவினை பேசு. பார்க்கலாம் உன் வீரத்தை" என ட்வீட் போட்டுள்ளார்.