நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை...

நீலகிரி, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வெறு மாவட்டங்களில்  புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரியில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மாவட்டத்தில் நட்சத்திர விடுதிகள், தனியார் காட்டேஜுகள், ஆலயங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இன்று முதல் 3 நாட்களுக்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கலான திற்பரப்பு நீர்விழ்ச்சி, மாத்தூர், தொட்டிபாலம் போன்ற அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் எந்த ஒரு கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரிசார்டுகள், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் அரங்குகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியை காண விரும்பும் பக்தர்கள் வீட்டிலேயே நேரடியாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் அருவிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் அருவிகளில் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், நோய் தொற்று அபாயம் ஏற்படக்கூடும் என மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.