சென்னையில் 4 இடங்களில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்க இருப்பதால் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய இடங்களில் சுங்கக் கட்டணம் வசூல் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். 30 தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன் படி இன்று அதிகாலை முதல் சுங்க கட்டணம் ரத்து அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. மேற்கண்ட 4 சுங்கச் சாவடிகளிலும் கார், லாரி உள்ளிட்ட எந்த விதமான வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
சுங்கக் கட்டணம் இல்லாமல் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சுங்கச் சாவடியை கடந்து செல்கின்றனர். ஒரு நாளில் குறைந்தபட்சம் 60 ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது அந்த தொகை மிச்சம் ஆவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாவலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.