பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உரிமம் ரத்து...காரணம் இதோ!

பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.

கடலூர் பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தனியார் பேருந்தில் விருத்தாச்சலத்திற்கு செல்லும் பயணிகள் மட்டும் ஏற வேண்டும் என நடத்துனர் கூறினார். ஆனால் வழியிலிருக்கும் குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடியவர்கள் ஏறுவதற்கு முயன்ற போது, நடத்துனர் தகாத முறையில் பேசியுள்ளார்.

இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகா எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளும்படி போக்குவரத்துப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.