இனி காவல்நிலையங்களில் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீர்...!

இனி காவல்நிலையங்களில் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீர்...!

கோவையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் வகையில் காவல்நிலையங்களில் மட்பாண்டங்கள் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

கோடைக்காலம் வந்தாலே, மனிதர்கள் முதல் பறவை விலங்குகள் வரை வெயிலின் தாக்கத்தால் அவதியடைவார்கள். அதுவும் பறவை மற்றும் விலங்குகள் இரண்டும் தண்ணீர் கிடைக்காமல் அங்குமிங்கும் அலைமோதும். இதனால் சிலர் தங்கள் வீடுகளின் மேல்கூரையில் தண்ணீர் வைப்பார்கள், சிலர் வீட்டு வாசலில் தண்ணீர் வைப்பார்கள். இதற்கிடையே வெயில் காலம் வந்தால் உங்கள் வீடுகளில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்குமாறு  அறிப்புகளும் வெளியாகும்.

இதையும் படிக்க : டைம்டேபிள் போட்டு 2 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவன்...வார கடைசியில் மட்டும் லீவாம்...!

இந்நிலையில் கோவையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் வகையில் காவல்நிலைங்களில் மட்பாண்டங்கள் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோடை வெப்பத்தினை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெயில் காலங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏற்கனவே பல நிவாரணங்கள் வழங்கியுள்ளதாகவும், ஏராளமான மட்பாண்டங்கள், பணியில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.