தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடம் தெரிஞ்சுக்கோங்க...!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடம் தெரிஞ்சுக்கோங்க...!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

மேலும், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.