நீலகிரி, கோவைக்கு எச்சரிக்கை... கனமழை பெய்யும்... 

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவைக்கு எச்சரிக்கை... கனமழை பெய்யும்... 
நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.