தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் கொரோனா பரவல்...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் கொரோனா பரவல்...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நாள்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 587  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் மேலும் 18 பேர்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 16 ஆயிரத்து 180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரே நாளில், 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், மேலும் 178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டனர்.