தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து காணப் படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, கோவையில் 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 170 பேருக்கும், ஈரோட்டில் 151 பேருக்கும், செங்கல்பட்டில் 120 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 27 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொற்று பாதிப்பால் இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தொற்று பாதிப்பில் இருந்து ஆயிரத்து 517 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும், 16 ஆயிரத்து 399 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.