மாண்டது மனிதநேயம்...! நோயாளியை வெளியே தள்ளிய அரசு மருத்துவர் ...!

மாண்டது மனிதநேயம்...!  நோயாளியை வெளியே தள்ளிய  அரசு மருத்துவர் ...!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், வலிப்பு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவரை இரவுப் பணியில் இருந்த மருத்துவர் கார்த்திக் தனியார் பாதுகாவலர் மூலம் வெளியேற்றியுள்ளார். 


சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சரவணன் வயது 51 என்ற நோயாளி உறவினர் இன்றி வலிப்பு நோய் காரணமாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த மருத்துவர் கார்த்திக் என்பவர்,  பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி திவாகரிடம்  நோயாளி நபரை  கொண்டு சென்று மருத்துவமனை வெளியே விடும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த செக்யூரிட்டி, நோயாளியை ஸ்டான்லி சுரங்கம் பாதை மேம்பாலம் அருகே பிளாட்பார்மில் படுக்க வைத்துள்ளார். இரவு முழுவதும் கொட்டும்  மலையிலேயே நோயாளி அவதிப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை அந்த வழியாக சென்ற  பொதுமக்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்து,  காவல் நிலையம் மற்றும் முதியோர் காப்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு வந்த முதியோர் காப்பகத்தை சார்ந்த நபர்கள், அவர் மீட்டு , அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மீண்டும்  நோயாளியை சேர்த்து விட்டனர். 

இதனைத்தொடர்ந்து,  இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ.  செல்வம், இது தொடர்பாக அரசு மருத்துவர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க முறையிட்டு  மருத்துவமனை முதல்வர் பாலாஜியிடம் புகார்  மனுவை  அளித்தார். 

இதையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்ததால் அங்கிருந்து  திரும்பினார். 

,மேலும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மக்களைக்  காக்கவேண்டிய மருத்துவர், அதுவும், அரசு மருத்துவராக இருந்துகொண்டு இப்படி நோயாளியை வெளியே தள்ளி பிளாட்பாரத்தில் படுக்கவைத்திருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மனிதநேயம் அழிந்துவருவது அனைவரும் அறிந்ததே.. ஆனால் அது  மருத்துவரிடமும் அழிந்தது என்பதுதான் வேஹட்டனிக்குரிய விஷயம். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com