தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீது விவாதம்...

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீது விவாதம்...

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதத்தை அடிப்படையாக வைத்து எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தநிலையில், தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடைகிறது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், 3 நாட்கள் சட்டசபை கிடையாது. இதையடுத்து வரும் 13-ந்தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. அன்றையதினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். தொடர்ந்து பொதுத்துறை மீதான விவாதமும் நடைபெற உள்ளது.