டிசம்பர் மாதத்துக்குள் 2064 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்” - அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

டிசம்பர் மாதத்துக்குள் 2064 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்” - அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் தற்போது வரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்  2023-24ஆம் ஆண்டுக்கான  சித்தா ஆயுர்வேதா யுனானியா மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

“சித்தா ஆயுர்வேதா ஆகிய படிப்புகளுக்கான கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

சித்தா மருத்துவ பல்கலைக்கழகம்  திருச்சியில் அமைக்கும் வகையாக திருச்சி பால்பண்ணை அருகில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்”, என்றார். 

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரங்கத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டில் உள்ள 2  அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள், 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 786 இடங்களும், அதே போல, ஒரு அரசு ஆயுர்வேதா  மருத்துவக் கல்லூரி மற்றும் 100 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 361 இடங்களிலும், ஒரு அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 46 இடங்களும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஒன்றும் என 11 தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 822 இடங்கள் என மொத்தமாக 2,064 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளதாக கூறினார். 

தொடர்ந்து, வருகின்ற 26-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

வரும் 27-ஆம் தேதி முதல் 29 வரை அரசு ஒதுக்கீட்டிட இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றார். வரும் 31-ஆம் தேதி அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும் என கூறினார். 

மேலும்,  “நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும். நவம்பர் மாதம் 20ஆம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும்”,  என்றார்.  

இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5242 உள்து. இதில் 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 4 இறப்புகள் ஏற்ப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஓமந்தூராரில் உள்ள கட்டிடத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றியபோது இரண்டு ஆண்டுகளில் வெரும் 500 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்றிருந்தனர்.

ஆனால், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துவங்கப்பட்டு சில மாதங்களை ஆன நிலையில் இன்று Op எண்ணிக்கை 858 உள்ளது. 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின்  எண்ணிக்கையானது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 45 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் 1021 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 

திருச்செங்கோடு குழந்தை கடத்தில் விவகாரத்தில் ஈடுபட்ட மருத்துவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..மேலும் அந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பேரும் கைது செய்துள்ளனர்

பருவ மழைக்காலத்தில் எலி காய்ச்சல் வருவது வழக்கம். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் எலி காய்ச்சலால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

இதையும் படிக்க   | “கிரிக்கெட் மைதானத்தில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம்: மதத்தை திணிக்கும் முயற்சி” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்