தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டண விவரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆம்னி பேருந்து சங்கத்தினர் கட்டண விவரங்களை அறிவித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில்  சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் அதிகாரப்பூர்வ கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

அதன்படி, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ஆயிரத்து 725 ரூயாயும், அதிகபட்ச கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாய் வரை வசூலிக்க நிர்ணம் செய்துள்ளனர்.

மேலும் சென்னையிலிருந்து சேலம் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ஆயிரத்து 363 ரூபாயும், அதிகபட்சமாக ஆயிரத்து 895 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

இதையடுத்து திருநெல்வேலி செல்ல ஆயிரத்து 960 ரூபாய் முதல் மூவாயிரத்து 268 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து மதுரை செல்ல  குறைந்தபட்ச கட்டணமாக ஆயிரத்து 688 ரூபாயும்,  அதிகபட்ச கட்டணமாக 2 ஆயிரத்து 554 ரூபாயும்  நிர்ணயித்துள்ளனர்.

திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் ஆயிரத்து 325 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 554 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளனர். 

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்ல 2 ஆயிரத்து 211 ரூபாய் முதல் மூவாயிரத்து 765 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க நிர்ணயம் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com