மணல் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடத்தில் ED ரெய்டு..! ஆவணங்கள் முடக்கம்

தமிழகத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் கணக்கில்வராத 2.33 கோடி ரூபாய் பறிமுதல் - 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, முதலீடு ஆவணங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செப்டம்பர் 12 ஆம் தேதி காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பட்டினம் ராமச்சந்திரன்,ரெத்தினம்,கரிகாலன் சென்னையில் உள்ள ஆடிட்டர் சண்முக ராஜ் ஆகியோரின் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட் 34 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

அதில் கைப்பற்றப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் கணக்கில்வராத 2.33 கோடி ரூபாயும் மற்றும் ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல ச செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, முதலீடு ஆவணங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com