தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ..." ஒரே டீவீட்டில் வெச்சு செஞ்ச அமைச்சர் செந்தில் பாலாஜி... ஆதாரதோடு மரண கலாய்

ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு விளக்கம் அளித்ததாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ..." ஒரே டீவீட்டில் வெச்சு செஞ்ச அமைச்சர் செந்தில் பாலாஜி... ஆதாரதோடு மரண கலாய்

கரூர் செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நான் தப்பித்தேன்- அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கரும், நோபலும் வழங்க வேண்டும் என செல்லூர் ராஜூ கிண்டல் செய்ததால் ஆதாரத்தை போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

 மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் மாணவரனி கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக நிரேவாகிகள் மற்றும் மாணவரனியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , அணில் காரணமாக ஏற்படும் மின்தடை குறித்த கேள்விக்கு பதிலளித்தார் முதலில் நான் தப்பித்தேன் என்றும் ஊடகங்களில் மற்றும் வலைதளங்களில் இருந்து தப்பித்தேன். திமுக அமைச்சர்கள் என்னை விஞ்ஞானி எனக்கூறுவர். ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பாக மின்சாரதத்துறை அமைச்சர் அணிலை கண்டுபிடித்துள்ளார்.அவர் தான் உண்மையான விஞ்ஞானி என கிண்டல் அடித்தார்.

 எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின் மற்றும் இரும்பு கம்பிகளில் செல்கிறது. அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கார் விருது நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தார்.

 இந்த நிலையில் நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி விபத்து - மின்கம்பியை சீரமைக்கும் பணியில் #TNEB ஊழியர்கள். மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூவை, இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம் பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார்.

தெர்மாகொள் மூலம் ஆவியாவதை தடுக்கும் முறையை செயல் படுத்தி தமிழக மக்கள் மனதில் மாபெரும் விஞ்ஞானி என்ற பட்டம் பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிட்க்கு மைக்கை பார்த்தவுடன் ஏதோ ஒன்று ஒளர வேண்டும் என அலறியது தான் இன்றைய ட்ரென்டிங்...