விவசாயியை தாக்கிய காட்டு யானை... காவலுக்கு சென்றபோது பரிதாபம்...

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்திற்கு காவலுக்குச் சென்ற விவசாயி காட்டுயானை தாக்கி பலி.

விவசாயியை தாக்கிய காட்டு யானை... காவலுக்கு சென்றபோது பரிதாபம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைப் பகுதியில் விவசாய நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் காட்டுயானைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பீதியிலேயே இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அடுத்துள்ள உளிபெண்டா கிராமத்தில் இரவில் விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்ற விவசாயி குண்டப்பா (63) என்பவரை காட்டுயானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இதுகுறித்து தளி வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.