"பட்டாசு விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டை பட்டாசு விபத்தில்லா மாநிலமாக, திமுக அரசு ஏற்படுத்தும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.

அரியலூர், ஓசூர் பகுதிகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகள் தொடர்பாக, சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர் கட்சிகள் கொண்டுவந்தன.

இதையும் படிக்க : இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சிறப்புத் தீர்மானம்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பட்டாசு விபத்துகளைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வருங்காலத்தில் பட்டாசு விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.