விசைப் படகை மீட்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை...!

மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்குமாறு, கோவை வந்த மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகனிடம் தூத்துக்குடி மீனவர்கள் வலியுறுத்தினர்.

கோவை நீலாம்பூரில் நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கை மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தபின், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம்...!கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்!!

அப்போது, மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்ட விசைப் படகிற்கு 2 கோடியே 27 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.