ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்.... ஆர் எஸ் பாரதி!!!

ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்.... ஆர் எஸ் பாரதி!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சட்டத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றியமும் மாநிலங்களும் என்ற தலைப்பின் இறுதி போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,மா சுப்பிரமணியன்,சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்,திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, இளங்கோவன் எம்.பி கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கி சிறப்பித்தார்

நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய ஆர். எஸ் பாரதி சட்ட துறை என்பது நீண்ட வரலாறு கொண்டது எனவும் மற்றவைகளுக்கு எல்லாம் அணி என்று பெயர் எனவும் ஆனால் இதற்கு மட்டும் தான் துறை என்று பெயர் எனவும் பேசினார்.

மேலும் ஒரு முதலமைச்சர் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் கவர்னரின் அனுமதி தேவை எனவும் ஆனால் அது கூட தெரியாமல் அன்று வழக்கு தொடுக்க ஆளுநரிடம் சென்றவர் சுப்பிரமணிய சுவாமி எனவும் தெரிவித்தார்.  ஆனால் அதனை கவர்னரிடமிருந்து ஒப்புதல் பெற்று சைதாப்பேட்டை அருகே இருந்த நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுத்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்று 300 கோடி  மதிப்புள்ள டான்சி நிலத்தை மீட்டுக் கொடுத்த  திமுகவுடன் ஆட்டுக்குட்டி ஆடுகிறது எனவும் ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும் எனவும் அண்ணாமலையை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய ஆர் எஸ் பாரதி எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கட்சி திராவிட கட்சி எனவும் அதனை உருவாக்கியவர் கலைஞர் தான் எனவும் கலைஞர் தான் திமுகவின் மூத்த வழக்கறிஞர் எனவும் தெரிவித்தார்.  மேலும் அண்ணா எப்படி அண்ணாமலை பல்கலைகழகத்தின் மூலம் மாணவர்களை பெரிய ஆட்களாக மாற்றி கட்சியை உருவாக்கினாரோ அதேபோல் தற்போது உள்ளவர்களும் திமுகவை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com