ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.....

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் 2021 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  சேர்க்கை சட்டத்தின் முன்வடிவிற்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம்   முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.....

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வகை செய்யும், இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கை சட்டத்தின் சட்ட முன்வடிவு, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் பரிந்துரைக்கு பின்னர், இந்த முன்வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர். என் ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர், சட்டமுன் வடிவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் பங்கேற்று விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர்.